திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில்  தமிழ்வளர்ச்சி துறை சார்பில் பயிலரங்கம்

விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் வருகிற 22,23 ஆகிய நாள்களில் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:00 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட தமிழ்வளர்ச்சி துறையின் சார்பில் வருகிற 22,23 ஆகிய நாள்களில் பயிலரங்கம் நடைபெற இருக்கிறது.

இது குறித்து மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: தமிழ்நாட்டின் ஆட்சிமொழி தமிழ்மொழி என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடரந்து அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ் வளர்ச்சிதுறையினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து திட்ட செயலாக்கத்தில் காணப்படும் குறைகளை களைந்தும் வருகின்றனர்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஆட்சி தமிழ் நூல், தமிழ் சொல் அகராதி, தமிழ் தட்டச்சு மற்றும் தமிழ் மென்பொருள், இளம் தமிழர் இலக்கிய பட்டறை, தமிழ் சுருக்கெழுத்து நூல், சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதும் அரசு பணியாளர்களுக்கு பரிசு தொகை, அரசு அலுவலர்களுக்கான தமிழ் மொழி ஆட்சி வகுப்பு மற்றும் பு்த்தாக்க பயிற்சி ஆகியவையும் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தினை மேலும் முனைப்புடன் செயல்படுத்தவும், இதில் காணப்படும் குறைகளை களையும் வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்கும் பயிலரங்கத்தை நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்பயிலரங்கம் மேற்குறிப்பிட்ட நாள்களில் நடத்தப்பட இருக்கிறது. அதனால், இப்பயிலரங்கத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகிக்க இருக்கிறார். அதனால், இப்பயிலரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.